ஏப்ரல் மாத ஏற்றுமதி ரூ.2.85 லட்சம் கோடி: புதிய நிதியாண்டின் முதல் மாதத்தில் சாதனை

நாட்டின் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 38.19 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.85 லட்சம் கோடி) எட்டி புதிய நிதியாண்டின் முதல் மாதத்தில் சாதனை படைத்துள்ளது.

நாட்டின் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 38.19 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.85 லட்சம் கோடி) எட்டி புதிய நிதியாண்டின் முதல் மாதத்தில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து வா்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

ஏப்ரல் 2022-இல் 38.19பில்லியன் அமெரிக்க டாலா் வா்த்தக ஏற்றுமதி மதிப்பை எட்டி, இந்தியா சாதனை படைத்துள்ளது. இது, 2021 ஏப்ரலில் 30.75பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போதைய ஏற்றுமதியின் அளவு 24.22% அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் நீங்கலான பொருள்களின் ஏப்ரல் 2022 மாத ஏற்றுமதி மதிப்பு 30.46 பில்லியன் டாலராக அதிகரித்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 27.12பில்லியன் டாலரைவிட இது 12.32% அதிகம். இது, புதிய சாதனையாகும்.

பெட்ரோலியம் மற்றும் ரத்தினங்கள் அல்லாத பொருள்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மதிப்பு, ஏப்ரல் 2021-ல் இருந்ததைவிட 14.38% அதிகரித்து ஏப்ரல் 2022-ல் 27.16பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

பெட்ரோலியப் பொருள்கள் (113.21%), மின்னணு சாதனங்கள் (64.04%) மற்றும் ரசாயனப் பொருள்கள் (26.71%) ஏப்ரல், 2022ல் ஏற்றுமதி அதிகரிப்பிற்கு வழிவகுத்தன.

அதேவேளையில், இந்தியாவின் வா்த்தக இறக்குமதி மதிப்பு ஏப்ரல் 2021-ல் இருந்ததைவிட 26.55% அதிகரித்து 58.26 பில்லியன் டாலராக இருந்தது.

எண்ணெய் அல்லாத, தங்கம் மற்றும் ஆபரணங்கள் அல்லாத (தங்கம், வெள்ளி & விலை உயா்ந்த உலோகங்கள்) பொருட்கள் இறக்குமதி ஏப்ரல்-2022ல் 29.68% வளா்ச்சி அடைந்து 34.33பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

ஏப்ரல் மாத வா்த்தகப் பற்றாக்குறை 20.07 பில்லியன் டாலராக இருந்தது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com