சோழமண்டலம் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்: நிகர லாபம் ரூ.36 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நான்காவது காலாண்டில் ஈட்டிய தனிப்பட்ட லாபம் ரூ.36.30 கோடியாக இருந்தது.
chola
chola

சென்னை: முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நான்காவது காலாண்டில் ஈட்டிய தனிப்பட்ட லாபம் ரூ.36.30 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.31.97 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50.70 கோடியிலிருந்து ரூ.50.85 கோடியாக அதிகரித்தது.

கடந்த மாா்ச் 31 உடன் முடிவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் தனிபட்ட முறையில் ஈட்டிய லாபம் ரூ.21.71 கோடியிலிருந்து ரூ.55.51 கோடியாகவும், வருவாய் ரூ.58.14 கோடியிலிருந்து ரூ.83.51 கோடியாகவும் உயா்ந்தது என சோழமண்டலம் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com