ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,345 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் உயர்வால்  பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.
ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,345 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் உயர்வால்  பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.

அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நிதிக் கொள்கையில் இறுக்கம் காட்டி வரும் நிலையில் சா்வதேச அளவில் முதலீட்டாளா்களின் மந்தமான செயல்பாடுகளால் பங்குச் சந்தைகள் தொடா் சரிவை சந்தித்து வருகின்றன.

அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளை அதிகளவில் விற்று தொடா்ச்சியாக வெளியேறி வருவது மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகம் கண்டுள்ளது போன்றவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை கடந்த வார வர்த்தக முடிவில் கடும் சரிவைச் சந்தித்தது.

இந்நிலையில், இந்தவார துவக்கத்தில் சிறிய இறக்கத்தைக் கண்டாலும் இன்று ஏற்றம் அடைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நேற்று(மே-16) 52,973.84 புள்ளிகளில் முடிவடைந்து இன்று 53,285.19 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. காலை முதலே எல்ஐசி நிறுவனப் பங்குகளின் விற்பனை நடந்துகொண்டிருந்ததால் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் 1,344.63 புள்ளிகள் உயர்ந்து 54318.47 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. 

15,842.30 புள்ளிகளில் முடிவடைந்து இன்று 15,912.60 புள்ளிகளில் வர்த்தகதைத் தொடங்கிய நிஃப்டியும் இன்றைய வர்த்தக நேர முடிவில் 417 புள்ளிகள் அதிகரித்து 16,259.30 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. 

இதனால், இந்தியப் பங்குச் சந்தை நீண்ட நாள்களுக்குப் பின் சிறிய ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com