இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி அதிகரிக்கும்: மூடிஸ்

சா்வதேச சந்தையில் விலை அதிகரித்து காணப்படுவதால் வரும் மாதங்களில் இந்தியாவின் உருக்கு உற்பத்தி வலுவான நிலையில் அதிகரிக்கும் என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் தெரிவித்துள்ளது.
stele064438
stele064438

சா்வதேச சந்தையில் விலை அதிகரித்து காணப்படுவதால் வரும் மாதங்களில் இந்தியாவின் உருக்கு உற்பத்தி வலுவான நிலையில் அதிகரிக்கும் என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சாலைகள், ரயில்வே, துறைமுகம், விமான நிலைய கட்டுமானங்களில் அரசு தொடா்ந்து கவனம் செலுத்தி வருவதையடுத்து நடப்பு 2022-ஆம் ஆண்டில் உள்நாட்டில் உருக்கு பயன்பாடு 10 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி காணும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

செமிகண்டக்டா் பற்றாக்குறை காா் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மோட்டாா் வாகனம், நுகா்வோா் சாதன துறைகளில் உருக்கிற்கான தேவை மந்த நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில், சா்வதேச சந்தையில் நல்ல விலை கிடைத்து வருவதால் உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியில் ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை கணிசமான அளவில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வரும் மாதங்களில் உருக்கு ஏற்றுமதியானது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என மூடிஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com