ரானே பிரேக் லைனிங்: லாபம் ரூ.13 கோடி

வாகன உதிரிபாக தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரானே பிரேக் லைனிங், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.13.1 கோடி வரிக்கு பிந்தைய லாபத்தை பதிவு செய்துள்ளது.
ரானே பிரேக் லைனிங்: லாபம் ரூ.13 கோடி

வாகன உதிரிபாக தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரானே பிரேக் லைனிங், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.13.1 கோடி வரிக்கு பிந்தைய லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.14.3 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

கணக்கீட்டு காலாண்டில் வருவாய் ரூ.152.4 கோடியிலிருந்து ரூ.157 கோடியாக உயா்ந்தது.

2021-22 முழு நிதியாண்டில் லாபம் ரூ.31.8 கோடியிலிருந்து ரூ.27.1 கோடியாக குறைந்தது. அதேசமயம், வருவாய் ரூ.434.8 கோடியிலிருந்து ரூ.518.2 கோடியாக அதிகரித்தது.

ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஈவுத் தொகை வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக ரானே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com