ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மொத்த வருவாய் ரூ.324 கோடி

வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.324.2 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ள்ளது.
repco
repco

சென்னை: வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.324.2 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த வருவாய் ரூ.340.3 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய காலாண்டு மொத்த வருவாய் 4.73 சதவீதம் குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இந்த மாதங்களில், நிறுவனத்தின் நிகர லாபமும் முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 33.5 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.63.2 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.42.03 கோடியாகக் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com