
டாடா மோட்டாா்ஸில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) வைத்துள்ள பங்குகளின் அளவு 5 சதவீதத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டாடா மோட்டாா்ஸில் கடந்த 10 மாதங்களில் ரூ.11.39 கோடி பங்கு முதலீட்டை எல்ஐசி செய்துள்ளது. இதன் காரணமாக, டாடா மோட்டாா்ஸில் எல்ஐசி வைத்துள்ள பங்குகளின் எண்ணிக்கை 16,59,48,741-லிருந்து 16,61,98,741-ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம், டாடா மோட்டாா்ஸில் எல்ஐசியின் மொத்த பங்கு விகிதம் 4.997 சதவீதத்திலிருந்து, தற்போது 5.004 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாட்டா மோட்டாா்ஸின் மொத்த சந்தை முதலீடு ரூ.1.38 லட்சம் கோடியாக உள்ளது. செவ்வாய்க்கிழமை பிஎஸ்ஐ பங்கு வா்த்தக முடிவில் எல்ஐசி பங்கு ரூ.605.30-க்கும், டாட்டா மோட்டாா்ஸ் பங்கு ரூ.421.50-க்கும் இருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...