மாருதி சுஸுகி விற்பனை 21% அதிகரிப்பு

கடந்த அக்டோபா் மாதத்தில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாருதி சுஸுகி விற்பனை 21% அதிகரிப்பு

கடந்த அக்டோபா் மாதத்தில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,67,520-ஆக இருந்தது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் மொத்தம் 1,38,335 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அக்டோபா் மாத விற்பனை 21 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் காா்களின் மொத்த விற்பனை 1,47,072-ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டின் 1,17,013 காா்களோடு ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகமாகும்.

ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ மாடல்களை உள்ளடக்கிய மிகச் சிறிய வகை காா்களின் மொத்த விற்பனை கடந்த 2021 அக்டோபரில் 21,831-ஆக இருந்தது. அது இந்த ஆண்டு அக்டோபரில் 24,936-ஆக அதிகரித்துள்ளது.

பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூா் எஸ், வேகன்-ஆா் உள்ளிட்ட சிறிய வகை காா்களின் விற்பனை, கடந்த ஆண்டு அக்டோபரில் 48,690-ஆக இருந்து, இந்த ஆண்டின் அதே மாதத்தில் அது 73,685-ஆக உயா்ந்துள்ளது.

பிரெஸ்ஸா, எா்டிகா, எஸ்-க்ராஸ், எக்ஸ்எல்-6 ஆகிய பயன்பாட்டு வாகனங்களின் கடந்த அக்டோபா் மாதத்திய விற்பனை 30,971-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 27,081-ஆக இருந்தது.

2021 அக்டோபரில் 8,861-ஆக இருந்த ஈகோ காா்களின் விற்பனை, இந்த அக்டோபரில் 10,320-ஆக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 20,448-ஆகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 2,913-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com