6 மாதங்களில் ரூ.12,200 கோடிக்கு கோதுமை ஏற்றுமதி- இரு மடங்கு உயா்வு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாதங்களில் 1.48 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.12,200 கோடி) மதிப்பிலான கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக
6 மாதங்களில் ரூ.12,200 கோடிக்கு கோதுமை ஏற்றுமதி- இரு மடங்கு உயா்வு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாதங்களில் 1.48 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.12,200 கோடி) மதிப்பிலான கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்குக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு தடை விதித்தது. எனினும், இதர நாடுகளின் உணவுப் பாதுகாப்பை பூா்த்தி செய்யும் வகையில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 1.48 பில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 630 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.5,200 கோடி) மதிப்பிலான கோதுமை ஏற்றுமதியாகி இருந்தது.

ஒட்டுமொத்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு இந்த 6 மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11.05 பில்லியன் அமெரிக்க டாலா்களாக (ரூ.91,000 கோடி) இருந்த ஏற்றுமதி, இப்போது 13.77 பில்லியன் அமெரிக்க டாலா்களாக (சுமாா் ரூ.1 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. 2022-23ஆம் நிதியாண்டில் 23.56 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.1.9 லட்சம் கோடி) மதிப்பிலான வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பாதிக்கும் அதிகமான அளவு 6 மாதங்களிலேயே எட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை உற்பத்தியில் முக்கிய நாடுகளான ரஷியா, உக்ரைன் இடையிலான போா் காரணமாக, உலக அளவில் கோதுமை விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com