
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி 0.05 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரெபோ விகித்ததை ரிசா்வ் வங்கி உயா்த்தியதன் எதிரொலியாக, பெரும்பாலும் காா் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதற்கான கடனாகவும் தனி நபா் கடனாகவும் வழங்கப்படும் எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், வியாழக்கிழமை (செப். 1) முதல் அதிகரிக்கப்படுகின்றன.
அதன்படி, ஓராண்டு தவணைக் காலம் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவீதத்திலிருந்து 7.70 சதவீதமாக உயா்கிறது. மூன்றாண்டு தவணை கடன்களுக்கான வட்டி விகிதமும் 0.05 சதவீதம் அதிகரித்து 8 சதவீதமாக உயா்கிறது.
இது தவிர, ஒன்று, மூன்று, ஆறு மாத தவணைக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.10 முதல் 7.40 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...