தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவு

ங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை எழுச்சி காணப்பட்டது.
தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவு

மும்பை: பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 18,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தது.

முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நிஃப்டி 18,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இன்றைய அமர்வில், சென்செக்ஸ் 1,540 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.

சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனை தொடர்ந்து சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பும் வேகத்தை அதிகரித்தது.

மறுபுறம் எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் ரியாலிட்டி குறியீடுகள் நஷ்டத்துடன் முடிவடைந்தன.

பங்குகளில் பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், டைட்டன் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டியது.

எச்டிஎப்சி வங்கி, பவர் கிரிட், எல்&டி, ஐடிசி, ரிலையன்ஸ், எஸ்பிஐ மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவையும் சாதகமாக உயர்ந்து முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com