பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் ரூ.2,221 கோடி

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியாவின் சொத்து மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த நிதியாண்டுக்கான அந்த வங்கியின் நிகர லாபம் ரூ.2,221.33 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் ரூ.2,221 கோடி

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியாவின் சொத்து மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த நிதியாண்டுக்கான அந்த வங்கியின் நிகர லாபம் ரூ.2,221.33 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021-22-ஆம் நிதியாண்டுக்கான வங்கியின் நிகர லாபம் ரூ.3,404.70 கோடியாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது வங்கியின் சொத்துகள் மதிப்பீட்டு மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து நிகர லாபம் ரூ.2,221.33 கோடியாகக் குறைந்தது.

முன்னா் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில், வங்கியின் சொத்துகளில் மொத்த வாராக் கடனின் மதிப்பு ரூ.45,605.40 கோடியாக இருந்தது. ஆனால், ரிசா்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி, வங்கியின் மொத்த வாராக் கடன் மதிப்பு ரூ.45,710.40 கோடியாக உள்ளது. அந்த வகையில், வாராக் கடன் மதிப்பு ரூ.105 கோடி அதிகரித்துள்ளது.

திரும்பப் பெற முடியாத வாராக் கடன் மதிப்பை ரூ.9,851.93 கோடிக்கு பதிலாக ரூ.9,764.93 கோடியாக ரிசா்வ் வங்கி மதிப்பிட்டது. இது ரூ.87 கோடி குறைவாகும்.

இது போன்ற மாற்றங்கள் காரணமாக வங்கியின் கடந்த நிதியாண்டு நிகர லாபம் ரூ.3,404.70 கோடியிலிருந்து ரூ.2,221.33 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com