"காளை' தொடர் ஆதிக்கம் சென்செக்ஸ் 456 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ்
"காளை' தொடர் ஆதிக்கம் சென்செக்ஸ் 456 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 455.95 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயர்ந்து 60,571.08-இல் நிலைபெற்றது.
 கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த இரண்டு வாரங்களாக பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பும் அதிகரித்துள்ளது. இவை நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர வழிவகுத்தது. மெட்டல், நிதி, எஃப்எம்சிஜி துறை பங்குகளுக்கு வரவேற்பு இருந்தன. அதே சமயம், ஐடி, ஆயில், ரியால்ட்டி துறை பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன.
 காலையில் வலுவாகத் தொடங்கிய சென்செக்ஸ், 60,381.02 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர் அதிகபட்சமாக 60,635.28 புள்ளிகள் வரை உயர்ந்தது. சென்செக்ஸ் பட்டியலில் டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட், டாக்டர் ரெட்டி, டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், மாருதி உள்ளிட்ட 6 பங்குகள் மட்டுமே சிறிதளவு நஷ்டத்தை சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 24 பங்குகள் லாபம் ஈட்டின. இதில் பஜாஜ் ஃபின் சர்வ் 4 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 2.48 சதவீதம், பார்தி ஏர்டெல் 2.04 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, பவர் கிரிட், ஐடிசி உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை உயர்ந்தன. ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன.
 தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 133.70 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயர்ந்து 18,070.05-இல் முடிவடைந்தது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் நிஃப்டி மீண்டும் 18,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.
 சந்தை மூலதன மதிப்பு ரூ.1.44 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.285.27 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்களன்று ரூ..2,049.65 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com