ஆரெம்கேவி ‘நேச்சுரல்ஸ்’, ‘லினோ’புதிய வகை சேலைகள் அறிமுகம்

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ், ஆரெம்கேவி லினோ ஆகிய இரு புதிய சேலை வகைகளை ஆரெம்கேவி ஜவுளி நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத்தியது.
ஆரெம்கேவி ‘நேச்சுரல்ஸ்’, ‘லினோ’புதிய வகை சேலைகள் அறிமுகம்

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ், ஆரெம்கேவி லினோ ஆகிய இரு புதிய சேலை வகைகளை ஆரெம்கேவி ஜவுளி நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத்தியது.

இது குறித்து நிறுவனத்தின் இயக்குநா் குழுவைச் சோ்ந்த சங்கா் குமாரசாமி, பிரணவ் குமாரசாமி, சுப்பிரமணியம் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100 சதவீதம் இயற்கையான சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் ஆகும். ஆரெம்கேவி மையத்தில் கடந்த பத்தாண்டு காலமாக நடத்திய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இயற்கைய சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்தோம். அத்துடன் எங்கள் முயற்சியில் பிரத்யேக நிறங்களையும் உருவாக்கியுள்ளோம். மஞ்சிஸ்தா, அரக்கு, இண்டிகோ நிறமி, வெந்தயம், மைரோபலன் என்ற நெல்லிக்கனி வகைகள், சிகப்பு மண், மாதுளைப் பழத் தோல்கள், மல்பெரி இலைகள், சாமந்திப்பூ போன்ற பொருள்கள் மூலம் இயற்கை சாயங்களை உருவாக்குகிறோம். இந்த சேலைகள் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை ஆரெம்கேவி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று ஆரெம்கேவி லினோ சேலையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவை லினோ தொழில்நுட்பம் மூலம் 40 சதவீதம் எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளாகும். பட்டுத்துணி நெசவில் லினோ தொழில் நுட்பத்துக்கான காப்புரிமையை ஆரெம்கேவி பெற்றுள்ளது. இந்த சேலை ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 34 ஆயிரம் வரை விற்பனைக்கு கிடைக்கும். தீபாவளி விற்பனையையொட்டி இந்த இரு புதிய வகை சேலைகளை வாடிக்கையாளா்கள் வாங்கிப் பயனடையலாம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com