ஐ.டி., வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 126 புள்ளிகள் முன்னேற்றம்

புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு
ஐ.டி., வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 126 புள்ளிகள் முன்னேற்றம்

புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 35.10 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயர்ந்து 18,232.55-இல் நிலைபெற்றது.
உலக அளவில் பெரிய அளவில் பொருளாதாரத் தரவுகள் ஏதும் இல்லாத நிலையில், உள்நாட்டுச் சந்தை அடுத்து வெளியாகவுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையே, உலகளாவிய சந்தை குறிப்புகள் நேர்மறையாக இருந்தது. சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும், வங்கி, ஐடி, பார்மா நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் முதலீட்டாளர்களின் உணர்வுகளைப் பாதித்துள்ளது. இதனால், சந்தை பெரிய அளவில் ஏற்றம் பெற முடியாமல் தவிப்பில் இருந்து வருகிறது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் முன்னேற்றம்:
காலையில் 92.91 புள்ளிகள் குறைந்து 61,074.88-இல் தொடங்கிய சென்செக்ஸ், 61,004.04 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 61,343.96 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில்126.41 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்ந்து 61,294.20-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 18 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன. குறிப்பாக வர்த்தகம் முடியும் தறுவாயில் பங்குகளை வாங்குவதற்கு வரவேற்பு காணப்பட்டது.
ஆக்ஸிஸ் பேங்க் அபாரம்:
பிரபல தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 2.22 சதவீதம், டைட்டன் 1.87 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, சன்பார்மா, இண்டஸ் இண்ட் பேங்க், விப்ரோ உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், நெஸ்லே, பஜாஜ்
ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சர்வ், ஹெச்டிஎஃ)ப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
எம் அண்ட் எம் வீழ்ச்சி: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 1.13 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவர், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட், ஐடிசி, மாருதி, இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.28 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் 284.66 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.212.57 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com