2-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிவடைந்தது.
2-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 372 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 104.75 புள்ளிகள் (0.57 சதவீதம்) குறைந்து 18,181.75-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை பலவீனமாகத் தொடங்கியது. பலவீனமான உலகளாவிய உணர்வுகளுக்கு மத்தியில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். அமெரிக்க சந்தையானது சமீபத்திய பொருளாதாரத் தரவுகளால் வழிநடத்தப்பட்ட மந்தநிலை கவலைகளுடன் இருந்தது. இதன் தாக்கத்தால், நேரம் செல்லச் செல்ல உள்நாட்டுச் சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக ஐடி, மீடியா, மெட்டல், ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. அதே சமயம் ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகள் ஓரளவு தாக்குப் பிடித்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்புவீழ்ச்சி:
 இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.94ஆயிரம் கோடி குறைந்து ரூ.277.18 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,406.86 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 61,932.32-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,979.94 வரை மேலே சென்றது. பின்னர், 61,340.10 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 371.83 புள்ளிகள் குறைந்து 61,560.64-இல் முடிவடைந்தது.
 23 பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 7 பங்குகள் மட்டுமே விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன.
 இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 874 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,164 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில்
 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com