பஜாஜ் விற்பனை 24 % அதிகரிப்பு

பஜாஜ் விற்பனை 24 % அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் 3 சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் மொத்த விற்பனை கடந்த ஜனவரியில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் 3 சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் மொத்த விற்பனை கடந்த ஜனவரியில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மாதம் நிறுவனம் 3,56,010 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 24 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,87,935-ஆக இருந்தது.மதிப்பீட்டு மாத்தில் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 31 சதவீதம் உயா்ந்து 2,30,043-ஆக உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,75,210-ஆக இருந்தது.

2023 ஜனவரியில் 1,12,725-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த ஜனவரியில் 12 சதவீதம் உயா்ந்து 1,25,967-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com