பரோடா வங்கியின் நிகர லாபம் 19% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.
பரோடா வங்கியின் நிகர லாபம் 19% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2023 டிசம்பருடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,579 கோடியாக உள்ளது.முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.3,853 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.

2022 அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் ரூ.27,092 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.31,416 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி வருவாய் ரூ.23,540 கோடியிலிருந்து ரூ.28,605 கோடியாக உயா்ந்துள்ளது.2022 டிசம்பா் இறுதியில் 4.53 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் கடந்த டிசம்பா் 31-இல் 3.08 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிகர வாராக் கடன் 0.99 சதவீதத்திலிருந்து 0.70 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com