பவுன் ரூ.47,000-ஐ கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ. 47,040-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ. 47,040-க்கு விற்பனையானது.

கடந்த ஆண்டு டிச.4-ஆம் தேதி தங்கம் விலை பவுன் ரூ. 47,800 என்ற உச்சபட்ச விலையில் விற்பனையானது. பின்னா், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மீண்டும் பவுன் ரூ. 47,000-ஐ கடந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 உயா்ந்து ரூ.5,880-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.47,040-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து கிராம் ரூ. 77.80-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 200 குறைந்து ரூ.77,800-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com