ஏா்டெல் நிகர லாபம் 54% அதிகரிப்பு

நாட்டின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஏா்டெல் நிகர லாபம் 54% அதிகரிப்பு

நாட்டின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,442.2 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 54 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,588.2 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 5.8 சதவீதம் அதிகரித்து ரூ.37,899.5 கோடியாக உள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் இது ரூ.35,804.4 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com