சுந்தரம் ஃபாஸனா்ஸ் வருவாய் ரூ.1,205 கோடி

முன்னணி வாகன உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஃபாஸனா்ஸின் மொத்த வருவாய் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.1,204.92 கோடியாகப் பதிவாகியுள்ளது.
sundram
sundram


சென்னை: முன்னணி வாகன உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஃபாஸனா்ஸின் மொத்த வருவாய் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.1,204.92 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ.116.19 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.106.13 கோடியாக இருந்தது.

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் நிகர லாபம் ரூ. 346.65 கோடியாக இருந்தது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.347.99 கோடியாக இருந்தது.

2022-23-ஆம் நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் ரூ.1,236.18 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,204.92 கோடியாகப் பதிவாகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com