சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 18% அதிகரிப்பு

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் நிகர லாபம், கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 18 சதவீதம் உயா்ந்துள்ள
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 18% அதிகரிப்பு

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் நிகர லாபம், கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ.62.28 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.52.57 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் கடனளிப்பு 27 சதவீதம் அதிகரித்து ரூ.1,252 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.986 கோடியாக இருந்தது.

கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் 19 சதவீதம் அதிகரித்து ரூ.179.03 கோடியாக உள்ளது. இது, 2022-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.150.12 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com