யூனியன் வங்கி நிகர லாபம் 60% உயா்வு

அரசுக்குச் சொந்தமான இந்திய யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
யூனியன் வங்கி நிகர லாபம் 60% உயா்வு

அரசுக்குச் சொந்தமான இந்திய யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 3,590 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 60 சதவீதம் அதிதமாகும்.

கடந்த ஜூலை முதல் செப்டபா் வரையிலான 2-ஆவது காலாண்டைவிட மதிப்பீட்டுக் காலாண்டில் நிகர லாபம் ரூ.79 கோடி அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் வங்கியின் கடனளிப்பு 11.44 சதவீதம் அதிகரித்து ரூ. 8,95,974 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் 6.26 சதவீதம் அதிகரித்து ரூ.9,168 கோடியாகவும், மற்ற வகை வருவாய் 15.4 சதவீதம் அதிகரித்து ரூ.3,774 கோடியாகவும் உள்ளது.

டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் 106 அடிப்படை புள்ளிகள் குறைந்து 1.08 சதவீதமாக (ரூ.9,351 கோடி) உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com