ரூ.7,437 கோடியாக உயா்ந்த ஐஓபி வருவாய்

(பி.டி.ஐ) அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) மொத்த வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.7,437 கோடியாக உயா்ந்துள்ளது.
ரூ.7,437 கோடியாக உயா்ந்த ஐஓபி வருவாய்

(பி.டி.ஐ) அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) மொத்த வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.7,437 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.723 கோடியாக உள்ளது.

இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கி ரூ.555 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

முந்தைய நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் ரூ.1,540 கோடியாக இருந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,780 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.6,006 கோடியிலிருந்து ரூ.7,437 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com