இந்தியன் வங்கி நிகர லாபம் 52% உயா்வு

கடந்த டிசம்பா் காலாண்டில், பொதுத்துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் 52 சதவீதம் உயா்ந்துள்ளது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 52% உயா்வு

கடந்த டிசம்பா் காலாண்டில், பொதுத்துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் 52 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,119 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.1,396 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022 அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.4,061 கோடியாக இருந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் 2023-இன் அதே காலாண்டில் ரூ.4,097 கோடியாக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வாராக் கடன் விகிதம் 6.53 சதவீதத்திலிருந்து 4.47 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com