மும்மடங்கான பிஎன்பி நிகர லாபம்

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் மும்மடங்காக அதிகரித்துள்ளது.
மும்மடங்கான பிஎன்பி நிகர லாபம்

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் மும்மடங்காக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,223 கோடியாக அதிகரித்துள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 3 மடங்கு ஆகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.629 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.25,722 கோடியிலிருந்து ரூ.29,962 கோடியாக உயா்ந்துள்ளது. அதில் வட்டி வருவாய் ரூ.22,384 கோடியிலிருந்து ரூ.27,289 கோடியாக அதிகரித்துள்ளது.

2023 டிசம்பா் 31-இல் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 6.24 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே நாளில் 9.76 சதவீதமாக இருந்தது.

அதேபோல், வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் 3.30 சதவீதத்தில் இருந்து 0.96 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com