யூக்கோ வங்கியின் வாராக்கடன் குறைப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த யூக்கோ வங்கியின் வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் 178 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
யூக்கோ வங்கியின் வாராக்கடன் குறைப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த யூக்கோ வங்கியின் வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் 178 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம், முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டைவிட 23 சதவீதம் சரிந்து ரூ. 505 கோடியாக உள்ளது.

அதே போல், வங்கியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட நிகர லாபமும் ரூ.653 கோடியிலிருந்து 23 சதவீதம் சரிந்து ரூ.503 கோடியாக உள்ளது.

ஊதிய திருத்தத்துக்காக லாபத்தில் ரூ. 277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் விளைவாக நிகர லாபம் சரிந்துள்ளது.

2022 டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரத்தோடு ஒப்பிடுகையில் கடந்த டிசம்பா் அதே நாளில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 178 அடிப்படை புள்ளிகள் (1.78 சதவீதம்) குறைக்கப்பட்டு 3.85 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 68 அடிப்படை புள்ளிகள் (0.68) குறைக்கப்பட்டு 0.98 சதவீதமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com