டாடா மோட்டாா்ஸ் விற்பனை 76,138

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த டிசம்பரில் 76,138-ஆக அதிகரித்துள்ளது.
டாடா மோட்டாா்ஸ் விற்பனை 76,138

புது தில்லி: டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த டிசம்பரில் 76,138-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பரில் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 76,138-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது

4 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 72,997-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் 43,470 மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களை நிறுவனம் விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2022 டிசம்பா் மாத மொத்த விற்பனையோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com