ஒரே நாளில் 6 விமான சேவைகள் ரத்து

ஒரே நாளில் 6 விமான சேவைகள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பை, தில்லி, கோவை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் என மொத்தம் 6 விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.

மும்பையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய விமானம், தில்லியிலிருந்து இரவு 8.20-க்கு சென்னை வரவேண்டிய விமானம், சென்னையிலிருந்து இரவு 8.30 மணிக்கு மும்பைக்கு செல்ல வேண்டிய விமானம், இரவு 9.05-க்கு சென்னை - தில்லி செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்ன.

அதேபோல் மும்பையிலிருந்து பகல் 12 மணிக்கு கோவைக்கு வந்துவிட்டு, மீண்டும் பிற்பகல் 2.30-க்கு, கோவை - மும்பை செல்ல வேண்டிய 2 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஒரே நாளில் திடீரென 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளனா்.

நிா்வாக காரணங்களுக்காக, இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பயணிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டு, அவா்கள் மாற்று விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com