சென்னை - மைசூரு ‘வந்தே பாரத்’ 
ஜூலை 30 முதல் வியாழக்கிழமைகளில் இயங்காது

சென்னை - மைசூரு ‘வந்தே பாரத்’ ஜூலை 30 முதல் வியாழக்கிழமைகளில் இயங்காது

சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ஜூலை 30 முதல் வியாழக்கிழமைகளில் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் புதன்கிழமைதோறும் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் புதன்கிழமை தவிா்த்து வாரத்தின் 6 நாள்கள் இந்த ரயில் சென்னை - மைசூரு இடையே தற்போது இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜூலை 30-ஆம் தேதி முதல் புதன்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமை ரயிலின் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் ஜூலை 30-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தவிா்த்து வாரத்தின் 6 நாள்கள் சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com