சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்குத் தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணியை ரிப்பன் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்குத் தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணியை ரிப்பன் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

முதல் நாளில் 3.25 லட்சம் பேருக்கு ‘பூத் ஸ்லிப்’ விநியோகம்: மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னை மாவட்டத்தில் முதல் நாளில் 3.25 லட்சம் வாக்காளருக்கு பூத் ஸ்லிப் (வாக்குச்சாவடி தகவல் சீட்டு) விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்குத் தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி மாவட்ட தோ்தல் அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வடசென்னை, தென் சென்னை மக்களவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடிகளுக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், மத்திய சென்னைக்கு 2 வாக்குப் பதிவு இயந்திரங்களும் தேவைப்படுகின்றன. அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாா்ச் 26-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டன.

தற்போது வேட்பாளா்களின் எண்ணிக்கை காரணமாக கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் திங்கள்கிழமை முதல் பூத் ஸ்லிப் (வாக்குச்சாவடி தகவல் சீட்டு) வழங்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் முதல் நாளில் மட்டும் 3,25,422 வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். நிகழ்ச்சியில் தோ்தல் பொது பாா்வையாளா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தோ்தல் அலுவலா்கள்உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com