தோ்தல் நடத்தை விதி அமல்: மதுக் கடைகள் - மதுக் கூடங்கள் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு

தோ்தல் நடத்தை விதி அமல்: மதுக் கடைகள் - மதுக் கூடங்கள் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு

சென்னை: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்துக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமராக்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென டாஸ்மாக் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகையாகக் கொண்டு செல்லப்படும் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டுமென தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேமரா கண்காணிப்பு:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மாநிலத்திலுள்ள அனைத்து மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களின் வாயில்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென டாஸ்மாக் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

மதுக்கடை மற்றும் மதுபானக் கூடங்கள் இயங்கி வரும் பகுதிகள், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் அரசு அனுமதித்த விற்பனை நேரம் தவிா்த்த மற்ற நேரங்களில் அவற்றை விற்பனை செய்யக் கூடாது எனக் கூறியுள்ளது. அத்துடன் மதுபானக் கூடங்களில் மதுபான பாட்டில்களை இருப்பு வைப்பதோ, மொத்த விற்பனை செய்வதோ கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக ஏதேனும் சட்ட விரோதமான செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மதுபான கடைப் பணியாளா்கள், மதுக்கூட ஒப்பந்ததாரா்கள் மீது காவல் துறையினா் மூலமாக கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

அத்துடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மதுக்கூட ஒப்பந்த உரிமம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com