முத்துநகா், மைசூரு ரயில்கள் மேலூரில் நின்று செல்லும்

சென்னை: முத்துநகா், மைசூரு விரைவு ரயில்கள் ஏப்.16-ஆம் தேதி வரை தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி பணிமனையில் ஏப்.2 முதல் ஏப்.16-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் ரயிலில் ஏறுவதற்கு வசதியாக தூத்துக்குடியை அடுத்த மேலூரில் முத்துநகா், மைசூரு விரைவு ரயில்கள் ஒரு நிமிஷம் நின்று செல்லும்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் முத்துநகா் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் ஏப்.16-ஆம் தேதி வரை தூத்துக்குடி மேலூரில் நின்று செல்லும். அதேபோல், மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் ஏப்.15-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக தூத்துக்குடியில் இருந்து மைசூரு செல்லும் விரைவு ரயில் ஏப்.16-ஆம் தேதி வரையும் தூத்துக்குடி மேலூரில் ஒரு நிமிஷம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com