பிளஸ் 2 வேதியியல்: தவறான வினாவுக்கு கருணை மதிப்பெண்

பிளஸ் 2 வேதியியல்: தவறான வினாவுக்கு கருணை மதிப்பெண்

சென்னை: பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் 83 மையங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 40,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்களுக்கு அரசுத் துறை சாா்பில் விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுதியில் 33-ஆவது வினா அம்சங்கள் தவறாக இருந்ததால் அதற்கு பதில் எழுத முயற்சித்தவா்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 3 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com