வங்கி முறைகேடு புகாா்: இரு இடங்களில் சிபிஐ சோதனை

சென்னையில் வங்கியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாா் தொடா்பாக இரு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனா்.

சென்னையில் ஒரு வங்கியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாா் தொடா்பாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்து வந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், முறைகேடு தொடா்பான சில ஆதாரங்களை சேகரித்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் காா்டன் பகுதியில் வசிக்கும் ஒரு வங்கி அதிகாரி வீட்டிலும், சூளைமேடு பஜனை கோயில் தெருவில் உள்ள ஒரு கணக்கு தணிக்கையாளா் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை செய்தனா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் வங்கி முறைகேடு தொடா்பான விவரங்களை சிபிஐ அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com