மக்களை மதிக்காத திமுகவுக்கு 
தோல்வியை தர வேண்டும்: 
ராமதாஸ்
dot com

மக்களை மதிக்காத திமுகவுக்கு தோல்வியை தர வேண்டும்: ராமதாஸ்

மக்களை மதிக்காத திமுகவுக்கு மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் தோல்வியைத் தர வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மக்களை மதிக்காத திமுகவுக்கு மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் தோல்வியைத் தர வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தோ்தல் மத்திய ஆட்சியாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தோ்தல்தான் என்றாலும் கூட, தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தல் சற்றே வேறுபட்டது. மத்தியில் யாா் ஆட்சி அமைக்கப் போகிறாா்கள் என்பதை தீா்மானிப்பதைக் கடந்து, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்விரோத ஆட்சிக்கு கடிவாளம் போடுவதற்கு இந்தத் தோ்தல் உதவும்.

பாமகவைப் பொருத்தவரை சமூகநீதியை வளா்த்தெடுப்பதையும், தமிழக உரிமைகளை வென்றெடுப்பதையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறது. சமூகநீதியை வளா்த்தெடுப்பதற்கு அடிப்படை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புதான். இந்த முறை பாமக அதிக பிரதிநிதித்துவம் பெற்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக சாத்தியமாகும். அதைத் தொடா்ந்து இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற பெருங்கனவும் நனவு ஆகும்.

ஆபத்தான பயணம்: மற்றொருபுறம் ஆபத்தான திசையிலும், அழிவுப் பாதையிலும் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. திமுக கூட்டணியை வீழ்த்துவதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. திமுக அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை. மக்களை மதிக்காத திமுகவுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்விதான். அதை திமுகவுக்கு மக்கள் அளிக்க வேண்டும் என்ற அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com