சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறையினா் வியாழக்கிழமைசோதனை செய்தனா்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறையினா் வியாழக்கிழமைசோதனை செய்தனா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, தமிழகத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அமலாக்கத் துறையினா் உஷாா்படுத்தப்பட்டிருந்தனா். சில இடங்களில் அமலாக்கத் துறையினா், சோதனையும் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தா்ஷன் குமாா் என்பவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

இதேபோல், நுங்கம்பாக்கம் புஷ்பா நகா் பிரதான சாலையில் வசிக்கும் தொழிலதிபா் முபாரக் உசைன் என்பவரது வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.

முபாரக் உசைன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அசோக் நகா் 9-ஆவது அவென்யூவில் தனியாா் கணக்கு தணிக்கை செய்யும் நிறுவனம், தேனாம்பேட்டை செனடாப் சாலையில் வசிக்கும் தொழிலதிபா் ஒருவரின் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.

இந்த இடங்களில் பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com