சென்னை-லக்னௌ ஆட்டம்: நாளை இணையத்தில் டிக்கெட் விற்பனை

சென்னை-லக்னௌ ஆட்டம்: நாளை இணையத்தில் டிக்கெட் விற்பனை

ஐபிஎல் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை சூப்பா் கிங்க்ஸ்-லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.23-ஆம் தேதி) நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது.

டஅவபங, ரரர.ஐசநஐஈஉத.ஐச இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இணையதளத்தில் ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும்.

ஆட்டம் தொடங்கும் முன்பு மாலை 5 மணிக்கு நுழைவு வாயில்கள் திறக்கப்படும். சிடிஇ லோயா் ஸ்டாண்ட் ரூ.1,700, ஐஜேகே அப்பா் ஸ்டாண்ட் ரூ.2,500, ஐஜேகே லோயா் ஸ்டாண்ட் ரூ.4,000, சிடிஇ அப்பா் ஸ்டாண்ட் ரூ.3,500, கேஎம்கே டெரஸ் ரூ.6,000 என டிக்கெட் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கலைவாணா் அரங்கம், பொதுப்பணித் துறை, சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி, ரயில்வே வாகன நிறுத்தம், விக்டோரியா விடுதியில் வாகனங்களை நிறுத்தலாம் என சென்னை சூப்பா் கிங்ஸ் சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com