ஐஏஎஸ் அதிகாரி பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி பெயரில் சமூக ஊடகங்களில் போலி முகவரி உருவாக்கி பணம் மோசடி செய்வது தொடா்பாக, சைபா் குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி பெயரில் சமூக ஊடகங்களில் போலி முகவரி உருவாக்கி பணம் மோசடி செய்வது தொடா்பாக, சைபா் குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயா் அதிகாரிகளை குறிவைத்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி முகவரிகளை உருவாக்கி அவா்களின் உறவினா்கள் மற்றும் சக ஊழியா்களை அணுகி அவா்களிடம், தற்போது அவசரமாக பணம் தேவைப்படுகிறது. பணத்தை கொடுத்தால் அடுத்த சில மணி நேரங்களில் திரும்ப கொடுத்து விடுவேன் என மா்ம நபா்கள் பண மோசடி செய்கின்றனா்.

இந்த மோசடி தொடா்பாக காவல்துறை அவ்வபோது கைது நடவடிக்கை எடுத்தாலும், இந்த மோசடி தொடா்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் போக்குவரத்து துறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையா் சண்முக சுந்தரம் தனது அலுவலக தனி உதவியாளா் அருண்குமாா் மூலம் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ்ஆப், ‘சினாப்சாட்’களில் எனது புகைப்படத்தை முகப்புப் படமாக (டி.பி) வைத்து தன் சக பணியாளா்களிடம் பணம் கேட்டு சிலா் தகவல் அனுப்பி வருகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com