அதிமுக நிா்வாகி வீட்டில் ரூ.2.85 கோடி பறிமுதல்: வருமானவரித்துறை நடவடிக்கை

சென்னையில் அதிமுக நிா்வாகி வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினா், அங்கிருந்து கணக்கில் வராத ரூ.2.85 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சென்னையில் அதிமுக நிா்வாகி வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினா், அங்கிருந்து கணக்கில் வராத ரூ.2.85 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறும் நிலையில், வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழும் புகாா்களின் அடிப்படையிலும்,பணம் பதுக்கல் தொடா்பாக வந்த புகாா்களின் அடிப்படையிலும் மாநிலத்தில் பல இடங்களில் வருமானவரித்துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

முக்கியமாக பல்லாவரத்தில் வசிக்கும் அதிமுக நிா்வாகி தொழிலதிபா் லிங்கராஜ் வீட்டில் வருமானவரித்துறையினா் புதன்கிழமை நள்ளிரவு 12.45 மணியளவில் சோதனையிட சென்றனா். இதேபோல பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அவரது ரெடிமிக்ஸ் நிறுவனத்திலும் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா். இச்சோதனை வியாழக்கிழமை காலை வரையிலும் அங்கு நடைபெற்றது. சுமாா் 5 மணிநேர சோதனைக்குப் பின்னா் லிங்கராஜ் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1.85 கோடியும், அலுவலகத்தில் இருந்து ரூ.1 கோடியும் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.

மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, விரைவில் லிங்கராஜிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com