அரசுப் பள்ளிகளுக்கு ரூ.63 கோடி மானியம் விடுவிப்பு

அரசுப் பள்ளிகளுக்கு ரூ.63 கோடி மானியம் விடுவிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ரூ.63.20 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ரூ.63.20 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2023-2024-ஆம் கல்வியாண்டின் தொடா் செலவினத்துக்காக மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கெனவே 50 சதவீதம் பள்ளி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத மானியத் தொகையை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கிடும் வகையில், ரூ. 63.20 கோடி பள்ளிக்கல்வி இயக்குநரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடா்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களின் வங்கிக் கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதியை ஆசிரியா்களுக்கு தரப்படவுள்ள டேப்லெட் (கையடக்கக் கணினி) தேவையான சிம் காா்டு வாங்குவதற்கு (ஓா் ஆசிரியருக்கு தலா ரூ.110) பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மானியத் தொகையை அதற்கான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் உரிய காலத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com