இன்று  பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

இன்று பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னையிலிருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை (ஏப்.19) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை (ஏப்.19) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06534) பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூரில் உள்ள யஷ்வந்தபுரத்துக்கு சென்றடையும். இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து பெரம்பூா், அரக்கோணம், ஜோலாா்பேட்டை, பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக யஷ்வந்தபுரம் சென்றடையும்.

இதற்கிடையே, ஏப்.19-இல், திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06008) மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், பாம்புகோவில் சந்தை , சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com