சென்னைப் பல்கலை.யில் இலவசக் கல்வி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வி திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஏழை மாணவா்கள் இளநிலை படிப்புகளில் சோ்ந்து பயன்பெறும் வகையில் சென்னைப் பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் (2024-2025) இந்தத் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்துக்கு சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சத்துக்கும் மிகாமல் இருக்கும் மாணவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள், பெற்றோரை இழந்த மாணவா்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பத்தை மாணவா்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com