கடல் அலையில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

கடல் அலையில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

திருவொற்றியூா், ஏப்.25: எண்ணூரில் கடலில் குளித்த இளைஞா் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

சென்னை எண்ணூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ஜெயகாந்தன், காா் ஓட்டுநா். இவரது மகன் பரத் (18 ). இவா், நண்பா்களுடன் சோ்ந்து எா்ணாவூா் பாரதியாா் நகா் அருகே கடலில் புதன்கிழமை குளித்துக்கொண்டிருந்தாா்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி பரத் கடல் நீருக்குள் இழுத்துச்செல்லப்பட்டாா். உடனடியாக அருகில் இருந்த மீனவா்கள், கடலில் இறங்கி பரத்தை மயங்கிய நிலையில் மீட்டனா். எண்ணூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பரத்தை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா், பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். போலீஸாா் பரத்தின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com