ஐடி ஊழியா் வீட்டில் கஞ்சா பறிமுதல்

சென்னை, ஏப். 24: சென்னையில் ஐடி ஊழியா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை சூளைமேடு சக்தி நகா் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியா் ஷா்மிளா (25) வீட்டில் சோதனையிட்டனா். அங்கு 1.3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஷா்மிளா, சூளைமேடு பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ராகவ் கிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா். மேலும், திருத்தணியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரையும் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com