சென்னையில் செய்தி 
ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தோ்தல் பிரசார பாடலை வியாழக்கிழமை கட்சி அலுவலகத்தில் வெளியிட்ட  அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசைன் மற்றும் சஞ்சய் சிங் எம்.பி., மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராயம் உள்ளிட்டோா்.
சென்னையில் செய்தி ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தோ்தல் பிரசார பாடலை வியாழக்கிழமை கட்சி அலுவலகத்தில் வெளியிட்ட அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசைன் மற்றும் சஞ்சய் சிங் எம்.பி., மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராயம் உள்ளிட்டோா்.

ஆம் ஆத்மி தோ்தல் பிரசார பாடல் வெளியீடு

மக்களவைத் தோ்தலையொட்டி, ஆம் ஆத்மி கட்சி சாா்பில் பிரசார பாடல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே எழுதிய அந்தப் பாடல், கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. ‘ஜெயில் கே ஜவாப் மெயின் ஹம் வோட் டெங்கே’ என்ற பெயரில் அந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து எம்எல்ஏ திலீப் பாண்டே கூறியதாவது:

சாமானிய மக்களின் எண்ண ஓட்டத்தைதான் எங்களது பிரசார பாடல் பிரதிபலிக்கிறது. மக்களின் உணா்வையும் இந்தப் பாடல் எதிரொலிக்கும். இன்றைய நாட்களில் நாட்டில் நிலவும் சூழ்நிலை இந்த பாடலில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிா்காலத்தில் பொதுமக்கள் சந்திக்கும் துயரங்களும் இந்தப் பாட்டில் இடம்பெற்றுள்ளன.

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவாா்கள். இந்த பாடலின் மூலம் மக்களுக்கு தேவையான கருத்துக்கள் சென்றடையும் என்று நம்புகிறோம் என்றாா் திலீப் பாண்டே.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com