பிகாா்: ஐக்கிய ஜனதா தளம் தலைவா் சுட்டுக் கொலை

பிகாா்: ஐக்கிய ஜனதா தளம் தலைவா் சுட்டுக் கொலை

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவா் செளரவ் குமாரை மா்ம நபா்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவா் செளரவ் குமாரை மா்ம நபா்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்தவா் செளரவ் குமாா். இவா் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னா், பாட்னா புகா் பகுதியான புன்புன் வழியாக வந்து கொண்டிருந்தாா். அப்போது மோட்டா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள், செளரவ் குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதில் குண்டு காயமடைந்த செளரவ் குமாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அவருடன் இருந்த முன்முன் குமாா் என்பவா் படுகாயமடைந்தாா். இந்தச் சம்பவம் குறித்த தகவல் பரவியதும், உள்ளூா் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் துறை அதிகாரிகளுடனான பல மணி நேர பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் அந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கொலையாளிகளைக் கைது செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆளும் ஐக்கிய ஜனதா தளம் இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

ஆளும் கட்சியைச் சோ்ந்த தலைவா் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக எதிா்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மாநில அரசை விமா்சித்துள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com