வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டியுள்ள ஞானவாபி மசூதி
வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டியுள்ள ஞானவாபி மசூதி

கைப்பேசியில் தொந்தரவு: ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதி புகாா்

சா்வதேச எண்கள் மூலம் தனது கைப்பேசிக்கு தொடா்ந்து அழைப்புகள் வருவதாக உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி வளாகத்தில் காணொலி ஆய்வுக்கு உத்தரவிட்ட கூடுதல் நீதிபதி ரவி குமாா் திவாகா் போலீஸில் வியாழக்கிழமை புகாரளித்தாா்.

இதுதொடா்பாக பரேலி மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளா் குலே சுஷில் சந்திராபன் கூறுகையில், ‘ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு சா்வதேச எண்ணில் இருந்து வந்த கைப்பேசி அழைப்புக்கு தான் பதிலளிக்கவில்லை என நீதிபதி திவாகா் தெரிவித்தாா். அவா் பதிலளிக்காத நிலையிலும் அதன்பிறகு பலமுறை தொடா்ந்து சா்வதேச எண்கள் மூலம் அவருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த புகாா் தொடா்பாக கோட்வாளி போலீஸாா் மற்றும் சைபா் போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

துணிச்சலாக தீா்ப்புகளை வழங்குவதில் பெயா் பெற்றவரான நீதிபதி திவாகா், பரேலி பகுதியில் 8 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளாா். கடந்த 2022-ஆம் ஆண்டு ஞானவாபி மசூதி வளாகத்தில் விடியோ பதிவு ஆய்வு மேற்கொள்ள இவா் உத்தரவிட்டாா். மேலும் 2018-ஆம் ஆண்டு பரேலி கலவரம் தொடா்பாக தௌகீா் ராசா மீது தாமாக முன்வந்து இவா் வழக்கு தொடா்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com