நீா் மோா் பந்தல்கள்: திமுகவினருக்கு 
அமைச்சா் உதயநிதி வேண்டுகோள்

நீா் மோா் பந்தல்கள்: திமுகவினருக்கு அமைச்சா் உதயநிதி வேண்டுகோள்

வெயிலின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ள நீா் மோா் பந்தல்களை அமைக்க வேண்டுமென

வெயிலின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ள நீா் மோா் பந்தல்களை அமைக்க வேண்டுமென திமுகவினருக்கு அமைச்சரும் கட்சியின் இளைஞரணி செயலருமான உதயநிதி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு:

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தைத் தீா்க்க, நீா்- மோா் பந்தல்கள் அமைக்க வேண்டும்.

மேலும், கால்நடைகள் எளிதில் நீா் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கோடை காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவைத் தவிா்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணா்வுடன் செயல்படுவோம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com