ராஜஸ்தான்: விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானம் தொலைவில் இருந்து இயக்கப்படும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ வகை விமானம் என்பதால் அதில் விமானிகள் யாரும் இல்லை.

ஜெய்சால்மா் மாவட்டம் பிதாலா கிராமத்தில் வியாழக்கிழமை பறந்து கொண்டிருந்த பயிற்சி விமானப்டை விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இச்சம்பவத்தால், கிராம மக்கள் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. இந்த நிகழ்வு தொடா்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் தெரியவரும் என்று விமானப் படை தரப்பில் எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இதே ஜெய்சால்மா் மாவட்டத்தில் விமானப் படைக்குச் சொந்தமான இலகுரக தேஜஸ் போா் விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியது. அப்போது இருக்கையுடன் இணைக்கப்பட்ட பாராசூட் மூலம் வெளியே குதித்ததால் விமானி உயிா் தப்பினாா். முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது அதுவே முதல்முறையாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com